சமந்தா கேட்ட 2 கோடி சம்பளம்

சமந்தா கேட்ட 2 கோடி சம்பளம்

PUBLISHED:21-Aug-2016

சமந்தா கேட்ட 2 கோடி சம்பளம்

ஆரம்பத்திலிருந்தே பல விஷயங்களில் சிவகார்த்திகேயன் தெளிவான பார்ட்டிதான். கதாநாயகி விஷயத்திலும் ஆரம்பத்திலிருந்தே மிக மிக தெளிவாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.  ஒரு படத்தில் புதுமுக நடிகையோ... வளர்ந்து வரும் நடிகையோ தனக்கு ஜோடியாக நடித்தால், அடுத்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடிப்பவர் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். வளரும் நிலையிலேயே அதாவது மான் கராத்தே படத்திலேயே அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்தார்.

இதோ இப்போது 'ரெமோ'வை முடித்த பிறகு மோகன் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாரா உடன் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு 3 கோடி சம்பளம் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தை முடித்ததும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். 

மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை கமிட் பண்ணியதைப்போல், பொன்ராம் படத்தில் சமந்தாவை கமிட் பண்ணி இருக்கின்றனர். சமந்தாவுக்கு இரண்டு கோடி சம்பளம் கேட்க, கடைசியில் ஒன்றரை கோடிக்கு ஃபைனல் பண்ணி இருக்கிறார்கள்.




Recommended For You